UPDATED : நவ 24, 2026 06:08 PM
ADDED : நவ 24, 2026 06:06 PM
சண்டிகர்: பஞ்சாபில், 17 கிலோ ஹெராயின் பறிமுதல் செய்யப்பட்டு, சிறுவன் உட்பட மூன்று பேர் கைது செய்யப்பட்டனர்.
பஞ்சாப் டி.ஜி.பி., கவுரவ் யாதவ் கூறியதாவது:
அண்டை நாடான பாகிஸ்தானில் இருந்து, ‘ட்ரோன்’ எனப்படும் ஆளில்லா குட்டி விமானங்கள் வாயிலாக, போதைப் பொருட்களை கடத்தி வந்து, நம் நாட்டின் பல மாநிலங்களுக்கு ஒரு கும்பல் சப்ளை செய்து வருவதை, பஞ்சாப் போலீசின் உளவுப்பிரிவு கண்டுபிடித்தது.
எல்லைப் பகுதியான அஜ்நாலாவில் இருந்து, போதைப் பொருட்களுடன் அமிர்தசரஸ் நோக்கி சென்ற மூன்று பேரை, அட்டா மெஹல் புகாரி சோதனைச் சாவடியில் போலீசார் மடக்கினர். அவர்களிடம் இருந்து, 17.5 கிலோ ஹெராயின் பறிமுதல் செய்யப்பட்டது. அமிர்தசரஸின் சேஹார்தா பகுதியை சேர்ந்த ஒரு சிறுவன், அருண் என்ற ரஹ்மத் மற்றும் ராகுல் சிங் ஆகிய மூன்று பேரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர். கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட பைக் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
