ADDED : மார் 29, 2025 07:18 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஹோஷியார்பூர்:பஞ்சாபில், கிராமக் கோவிலில் அன்னதானம் சாப்பிட்ட 10 குழந்தைகள் உட்பட 17 பேர் உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
பஞ்சாப் மாநிலம் ஹோஷியார்பூர் மாவட்டம் பினேவால் கிராமத்தில் உள்ள ஒரு கோவிலில் நேற்று முன் தினம் பலர் அன்னதானம் சாப்பிட்டனர்.
அதில், 10 குழந்தைகள் உட்பட 17 பேருக்கு வாந்தி மற்றும் வயிற்று வலி ஏற்பட்டது. உடனடியாக, பினேவால் ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்க்கப்பட்டனர். அங்கு, முதலுதவி செய்யப்பட்டு, கர்ஷங்கர் நகரில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
பாதிக்கப்பட்ட 17 பேரும் அபாய கட்டத்தை தாண்டிவிட்டதாகவும், உடல்நிலை தொடர்ந்து கண்காணிக்கப்படுகிறது எனவும் டாக்டர்கள் கூறினர்.