17 வயது சிறுவன் கத்தியால் குத்திக் கொலை: டில்லியில் பதட்டம்; பலத்த பாதுகாப்பு
17 வயது சிறுவன் கத்தியால் குத்திக் கொலை: டில்லியில் பதட்டம்; பலத்த பாதுகாப்பு
ADDED : ஏப் 18, 2025 11:09 AM

புதுடில்லி: டில்லியில் உள்ள சீலம்பூரில் 17 வயது சிறுவன் கத்தியால் குத்திக் கொலை, செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பதட்டமான சூழல் நிலவியது.
வடகிழக்கு டில்லியின் சீலம்பூரில் 17 வயது சிறுவன் நேற்று இரவு கத்தியால் குத்திக் கொல்லப்பட்டான். இறந்த சிறுவன் தனது குடும்பத்துடன் நியூ சீலம்பூரில் வசித்து வந்தார்.
தாக்குதலை நடத்திய பிறகு, தாக்குதல் நடத்தியவர்கள் சம்பவ இடத்திலிருந்து தப்பி ஓடிவிட்டனர். மருத்துவமனை அழைத்துச் செல்லப்பட்ட போது சிறுவன் இறந்து விட்டான் என்பதை டாக்டர்கள் உறுதி செய்தனர்.
நேரில் பார்த்தவர்களும், உள்ளூர்வாசிகளும் கொலை செய்தது ஒரு குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்று கூறியதால், அந்தப் பகுதியில் பதற்றம் அதிகரித்தது. இந்தக் கொடூரமான கொலை, அப்பகுதி மக்களிடையே ஆத்திரத்தைத் தூண்டியது. அவர்கள் வீதிகளில் இறங்கி, சாலைகளை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் டில்லியில் பதட்டமான சூழல் நிலவுகிறது.