நடப்பாண்டில் விமானங்களில் 183 தொழில்நுட்ப கோளாறுகள்
நடப்பாண்டில் விமானங்களில் 183 தொழில்நுட்ப கோளாறுகள்
ADDED : ஜூலை 29, 2025 06:32 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுடில்லி: நடப்பாண்டில் விமானங்களில், 183 தொழில்நுட்பக் கோளாறுகள் ஏற்பட்டுள்ளது என, ராஜ்யசபாவில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து ராஜ்யசபாவில், விமான போக்குவரத்து துறை அமைச்சர் ராம் மோகன் நாயுடு கூறியதாவது: ஜூலை 23 நிலவரப்படி, இந்திய விமான நிறுவனங்கள், 183 தொழில்நுட்பக் கோளாறுகளை பதிவு செய்துள்ளன. இது, 2023 உடன் ஒப்பிடுகையில், 6 சதவீதம் குறைவு.
குஜராத்தின் ஆமதாபாதில் நிகழ்ந்த ஏர் இந்தியா விபத்துக்கு பின், விமானத்தின் முக்கிய சாதனங்கள் சரியாக வேலை செய்கின்றனவா என்பதை சரிபார்க்கும்படி, சிவில் விமான போக்குவரத்து இயக்குநரகம் உத்தரவிட்டுள்ளது. இது முறையாக கடைப்பிடிக்கப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.