ADDED : ஜன 02, 2024 06:57 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெங்களூரு: பெங்களூரில் 2023ல் போக்குவரத்து விதி மீறல் தொடர்பாக, 184.83 கோடி ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டது.
இது குறித்து, போக்குவரத்து போலீஸ்துறை வெளியிட்ட அறிக்கை:
கடந்த 2023ல், ஜனவரி முதல் டிசம்பர் வரை, சாலை போக்குவரத்து விதிமீறல் தொடர்பாக, 89 லட்சத்து 74 ஆயிரத்து 945 வழக்குகள் பதிவாகின. கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்து, 87 லட்சத்து 25 ஆயிரத்து 321 வழக்குகளும், போலீசார் நேரடியாக 2 லட்சத்து 49 ஆயிரத்து 624 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டன.
போக்குவரத்து விதிகளை மீறிய வாகன பயணியரிடம், 184.83 கோடி ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டது. குடிபோதையில் வாகனம் ஓட்டியதாக 7,055 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. 4,095 சாலை விபத்துகளில், 909 பேர் உயிரிழந்தனர்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

