ADDED : செப் 19, 2024 10:55 PM
பெங்களூரு: லோக் ஆயுக்தாவில் அரசியல்வாதிகள், அரசு ஊழியர்கள் மீதான, ஊழல் தொடர்பாக 18,886 வழக்குகள் 'பெண்டிங்' கில் இருப்பது தெரிய வந்து உள்ளது.
கர்நாடக அரசியல்வாதிகள், அரசு ஊழியர்கள், அரசு நிறுவனங்களில் நடக்கும் ஊழல், முறைகேடுகளை லோக் ஆயுக்தா விசாரிக்கிறது. வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்க்கும் அரசு ஊழியர்கள் வீடு, அலுவலகங்களில் சோதனை நடத்துகிறது. அதிரடியான நடவடிக்கைகள் எடுப்பதால், லோக் ஆயுக்தா மீது ஊழல்வாதிகளுக்கு பயம் உண்டு.
ஆனால் கடந்த 2013 - 2018 காங்கிரஸ் ஆட்சியில், லோக் ஆயுக்தாவிற்கு பதிலாக ஊழல் தடுப்பு தடை கொண்டு வரப்பட்டது. லோக் ஆயுக்தா போல, ஊழல் தடுப்பு படையை, அரசியல்வாதிகள் சரியாக செயல்படவிடவில்லை.
கடந்த பா.ஜ., ஆட்சியில் மீண்டும், லோக் ஆயுக்தா கொண்டு வரப்பட்டது. இந்நிலையில் லோக் ஆயுக்தாவில் 18,886 வழக்குகள் நிலுவையில் இருப்பது தெரியவந்து உள்ளது. இதில் ஊழல் தடுப்பு படை இருந்த போது, பதிவான வழக்குகளும் அடங்கும்.
ஊழியர்கள் பற்றாக்குறை, வழக்குகளுக்கு சரியான ஆதாரம் இல்லாதது உள்ளிட்ட காரணங்களால், வழக்குகளுக்கு தீர்வு காண்பதில் சிக்கல் இருப்பதாக, லோக் ஆயுக்தா அதிகாரிகள் கூறுகின்றனர்.
லோக் ஆயுக்தாவில் 5,495, உப லோக் ஆயுக்தாவில் 13,391 வழக்குகள் நிலுவையில் உள்ளன.