ADDED : மே 29, 2025 08:13 PM
புதுடில்லி:டில்லியில்கொரோனா தொற்று பாதிக்கப்பட்ட 19 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
கடந்த திங்கட்கிழமை நிலவரப்படி, கொரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 104ஆக இருந்தது. கொரோனா பாதித்த 24 பேர் கடந்த வாரம் குணமடைந்தனர். மற்றவர்களுக்கு வீட்டில் இருந்தபடியே சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் இணை நோய்களுடன் கொரோனா தொற்று பாதிக்கப்பட்ட 19 பேர், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
லோக் நாயக் ஜெய் பிரகாஷ் மருத்துவமனையில் ஆய்வு செய்த முதல்வர் ரேகா குப்தா, செய்தியாளர்களிடம், “டில்லி அரசு விழிப்புடன் உள்ளது. மருத்துவமனைகள் தயாராக உள்ளன. கவலைப்படத் தேவையில்லை. ஒவ்வொரு சூழ்நிலைக்கு அரசு தயாராக உள்ளது,” என்றார்.
மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டியதன் அவசியத்தையும் அவர் சூசகமாக உணர்த்தினார்.