பாகிஸ்தானில் இருந்து புலம்பெயர்ந்த 195 பேருக்கு கிடைத்தது இந்திய குடியுரிமை
பாகிஸ்தானில் இருந்து புலம்பெயர்ந்த 195 பேருக்கு கிடைத்தது இந்திய குடியுரிமை
UPDATED : டிச 12, 2025 02:33 PM
ADDED : டிச 12, 2025 02:23 PM

ஆமதாபாத்: பாகிஸ்தானில் இருந்து அகதிகளாக நம் நாட்டிற்குள் வந்த 195 பேருக்கு இந்திய குடியுரிமைக்கான சான்றிதழை குஜராத் துணை முதல்வர் ஹர்ஷ் சங்வி வழங்கினார்.
ஆமதாபாத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், பாகிஸ்தானில் இருந்து வந்த புலம்பெயர்ந்தோர் 195 பேருக்கு இந்திய குடியுரிமை சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. குடியுரிமை பெற்றவர்கள், ஹிந்து, சீக்கிய, பவுத்த மற்றும் சமண சமூகத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர்.
நிகழ்ச்சியில் பேசிய குஜராத் துணை முதல்வர் ஹர்ஷ் சங்வி, 'புன்னகையோடு வாழுங்கள். இனி நீங்கள் இந்திய குடிமக்கள். இந்தியாவில் தஞ்சம் அடைந்தவர்கள், முந்தைய அரசுகளின் (காங்கிரஸ்) புறக்கணிப்பால், இந்தியாவில் அகதிகளாக வாழ்ந்து வந்தனர். பிரதமர் மோடியின் தலைமையிலான அரசு, 1947 மற்றும் 1956க்குப் பிறகு இந்தியாவுக்கு வந்தவர்களுக்கு சிஏஏ சட்டத்தைக் கொண்டு வந்து, அகதிகளாக வாழ்ந்து வந்தவர்களின் நீண்ட கால கனவான இந்திய குடியுரிமையை பெற வழிவகை செய்தது,' எனக் கூறினார்.
குடியுரிமை பெற்ற 195 பேரில் 122 பேர் சிஏஏ சட்டத்தின் கீழ் குடியுரிமை பெற்றனர். மீதமுள்ள 73 பேர் ஆமதாபாத் கலெக்டர் அலுவலகத்தில் விண்ணப்பித்ததன் அடிப்படையில் குடியுரிமை சான்றிதழ்களைப் பெற்றனர்.

