ADDED : பிப் 20, 2025 06:48 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காடுகோடி: ஆந்திர மாநிலம், மதனப்பள்ளியை சேர்ந்தவர் சுரேந்திர ரெட்டி. பெங்களூரு ஒயிட்பீல்டில் தனியார் நிறுவனத்தில் பணியாற்றுகிறார். மனைவி, இரண்டு வயது மகன் தனவ் ரெட்டியுடன், காடுகோடியில் வசித்தார்.
நேற்று மாலை குழந்தை வீட்டின் முன் நின்று விளையாடிக் கொண்டிருந்தது. அந்த வழியாக வந்த பொக்லைன் இயந்திரம், குழந்தை மீது மோதியது.'
இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் அலறினர்.
பொக்லைன் டிரைவர், அங்கிருந்து தப்பினார். படுகாயத்துடன் உயிருக்கு போராடிய குழந்தையை, அப்பகுதியினர் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
வழியிலேயே குழந்தை இறந்தது. தலைமறைவாக உள்ள டிரைவரை போலீசார் தேடுகின்றனர்.

