தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/ஆம் ஆத்மி 2 எம்.எல்.ஏ.,க்கள் பஞ்சாபில் திடீர் ராஜினாமா

ஆம் ஆத்மி 2 எம்.எல்.ஏ.,க்கள் பஞ்சாபில் திடீர் ராஜினாமா

ஆம் ஆத்மி 2 எம்.எல்.ஏ.,க்கள் பஞ்சாபில் திடீர் ராஜினாமா


ADDED : நவ 01, 2026 04:17 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 01, 2026 04:17 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சண்டிகர்: பஞ்சாப் சட்டசபை தேர்தலுக்கான முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை ஆளும் ஆம் ஆத்மி கட்சி வெளியிட்ட நிலையில், அக்கட்சியின் இரு எம்.எல்.ஏ.,க்கள் திடீரென தங்கள் பதவியை இன்று (நவ.,1) ராஜினாமா செய்தனர்.

பஞ்சாபில், முதல்வர் பகவந்த் மான் தலைமையில் ஆம் ஆத்மி ஆட்சி நடக்கிறது. இங்கு, 2027 பிப்ரவரியில் சட்டசபை தேர்தல் நடக்கிறது. ஆளுங்கட்சியான ஆம் ஆத்மி, 40 பேர் அடங்கிய முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை நேற்று (அக்.,31) வெளியிட்டது. முதல்வர் பகவந்த் மான், துரி தொகுதியில் மீண்டும் போட்டியிடுகிறார். இந்த பட்டியலில், தற்போதைய அமைச்சர்கள் யாரும் இடம்பெறவில்லை.

இந்நிலையில், ஆம் ஆத்மியின் சனுார் தொகுதி எம்.எல்.ஏ., ஹர்மீத் சிங், சமானா தொகுதி எம்.எல்.ஏ., சேத்தன் சிங் ஆகியோர், தங்கள் பதவியை இன்று திடீரென ராஜினாமா செய்தனர். கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்தும் விலகுவதாக அவர்கள் அறிவித்தனர். முதல்வர் பகவந்த் மானுடன் ஏற்பட்ட மனக்கசப்பு மற்றும் கட்சியில் ஓரங்கட்டப்படுவதால் இருவரும் இம்முடிவை எடுத்ததாக கூறப்படுகிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us