ADDED : மே 20, 2025 06:39 AM
புதுடில்லி:அலிப்பூர் பல்லா சவுக் அருகே டிராக்டர்- கவிழ்ந்து ஒருவர் உயிரிழந்தார். அதேபோல, உத்தர பிரதேசத்தின் ஷாம்லியில் தடுப்புச் சுவரில் கார் மோதி பாட்டி, பேத்தி பலியாகினர்.
உத்தர பிரதேச மாநிலம் முசாபர் நகரைச் சேர்ந்தவர் வஜீத், 44. நேற்று முன் தினம், ஹருண் என்பவர் டிராக்டரில் சென்றார்.
அலிப்பூர் பல்லா சவுக் அருகே, டிராக்டர் கவிழ்ந்தது. வண்டிக்கு அடியில் சிக்கிய வஜீத், பலத்த காயம் அடைந்த நிலையில் மீட்கப்பட்டு, சத்யவாடி ராஜா ஹரீஷ் சந்திரா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
பரிசோதனை செய்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே இறந்து விட்டதை உறுதி செய்தனர். இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், டிராக்டரை பறிமுதல் செய்தனர்.
இருவர் பலி
ஹரியானா மாநிலம் பானிபட் நகரைச் சேர்ந்த லட்சுமி தேவி,70, மற்றும் குடும்பத்தினர் ஹரித்துவார் சென்றனர். அங்கிருந்து காரில் நேற்று முன்தினம் இரவு ஊர் திரும்பினர்.
உத்தர பிரதேச மாநிலம் ஷாம்லி மாவட்டம் பானிபட் - -காதிமா நெடுஞ்சாலையில் மாவி கிராமம் அருகே, டிரைவர் கட்டுப்பாட்டை இழந்த கார், தடுப்புச் சுவரில் மோதியது.
லட்சுமி தேவி மற்றும் அவரது பேத்தி வனிகா, 3, இருவரும் அதே இடத்தில் உயிரிழந்தனர். காயம் அடைந்த நான்கு பேர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.