பயிற்சியின் போது விபரீதம்; குண்டுவெடித்து அக்னிவீரர்கள் 2 பேர் பலி
பயிற்சியின் போது விபரீதம்; குண்டுவெடித்து அக்னிவீரர்கள் 2 பேர் பலி
ADDED : அக் 11, 2024 05:15 PM

நாசிக்; நாசிக் அருகே பயிற்சியின் போது குண்டு வெடித்ததில் அக்னி வீரர்கள் 2 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
மகாராஷ்டிரா மாநிலம், நாசிக் மாவட்டத்தில் உள்ள பீரங்கி பயிற்சி மையத்தில் அக்னிவீரர்கள் வழக்கம்போல் துப்பாக்கி மற்றும் குண்டுகளை வைத்து பயிற்சியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது எதிர்பாராதவிதமாக குண்டுகள் வெடித்து சிதறின.
இந்த விபத்தில் அக்னிவீரர்கள் கோஹில் விஸ்வராஜ் சிங்(20), சைபத் ஷிட்(21) ஆகியோர் படுகாயம் அடைந்தனர். உடனடியாக இருவரும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு அவர்களை பரிசோதித்த மருத்துவர்கள் 2 பேரும் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
இதையடுத்து, ஹவில்தார் அஜித்குமார் அளித்த புகாரில் தியோலாலி போலீஸ், இந்த சம்பவத்தை எதிர்பாராத விபத்தாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.