தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/பஹல்காம் தாக்குதலில் பயங்கரவாதிகளுக்கு உதவிய 2 பேர் கைது

பஹல்காம் தாக்குதலில் பயங்கரவாதிகளுக்கு உதவிய 2 பேர் கைது

பஹல்காம் தாக்குதலில் பயங்கரவாதிகளுக்கு உதவிய 2 பேர் கைது


ADDED : ஏப் 26, 2025 09:45 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 26, 2025 09:45 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் மாநிலம் பஹல்காம் தாக்குதலில் பயங்கரவாதிகளுக்கு உதவிய 2 பேரை பாதுகாப்புப் படையினர் கைது செய்தனர்.

காஷ்மீரில் நடந்த பயங்கரவாத தாக்குதல் காரணமாக அங்கு பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டு உள்ளனர். மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, காஷ்மீர் சென்று நிலைமையை ஆய்வு செய்தார். உயிரிழந்தவர்களுக்கு ஆறுதல் கூறிய அவர், தாக்குதலுக்கு காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்து உள்ளார். பயங்கரவாதிகளை ராணுவத்தினர் வலை வீசி தேடி வருகின்றனர்.

இந்நிலையில், பஹல்காம் தாக்குதலில் பயங்கரவாதிகளுக்கு உதவிய 2 பேரைக் பாதுகாப்புப் படையினர் கைது செய்தனர். பயங்கரவாதிகளுக்கு உதவிய மேலும் 2 பேரின் வீடுகளை ராணுவம் இடித்து தகர்த்தது. இது குறித்து ராணுவ அதிகாரி ஒருவர் கூறியதாவது:

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலின் ஒவ்வொரு குற்றவாளியும் ஆதரவாளரும், அவர்களின் இருப்பிடத்தில் சென்று வேட்டையாட வேண்டும். நமது மக்களுக்கு எதிரான கோழைத்தனமான மற்றும் கொடூரமான செயலுக்கு அவர்கள் பெரும் பாதிப்பை சந்திக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us