ஆயுதக் கடத்தல் கும்பலில் 2 பேர் கைது; பஞ்சாபில் பயங்கர சதி முறியடிப்பு
ஆயுதக் கடத்தல் கும்பலில் 2 பேர் கைது; பஞ்சாபில் பயங்கர சதி முறியடிப்பு
ADDED : நவ 25, 2025 09:42 PM

சண்டிகர்: பஞ்சாபில் எல்லை தாண்டிய ஆயுதக் கடத்தல் கும்பலை சேர்ந்த இரண்டு பேரைக் கைது செய்து, அவர்களிடமிருந்து இரண்டு கையெறி குண்டுகள் மற்றும் துப்பாக்கியை பஞ்சாப் போலீசார் மீட்டுள்ளனர்.
பஞ்சாபில் எல்லை தாண்டிய ஆயுத கடத்தல் கும்பல் செயல்பட்டு வருவதாக உளவுத்துறை தகவல் கொடுத்தது. அதன் அடிப்படையில், மாநில சிறப்பு செயல்பாட்டுப் பிரிவு அதிகாரிகள் பாசில்கா, ஜலாலாபாத் பகுதியில் சோதனை நடத்தி, விக்ரம் சிங் மற்றும் பிரப்ஜோத் சிங் என்ற பிரப் ஆகிய இரண்டு பேரை கைது செய்தனர்.
அவர்களிடமிருந்து இரண்டு கைக்குண்டுகள், துப்பாக்கி மற்றும் இரண்டு தோதுப்பாக்கிமீட்டனர். மீட்கப்பட்ட ஆயுதங்கள் பாகிஸ்தானிலிருந்து பெறப்பட்டு, பஞ்சாபில் திட்டமிட்ட குற்றச் செயல்களுக்காக ட்ரோன் மூலம், விற்பனை செய்யப்பட்டு வந்தது முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
எல்லை தாண்டிய ஆயுத கடத்தல் கும்பலை கைது செய்து, பாதுகாப்பான பஞ்சாப் மாநிலத்தை உறுதி செய்வதில் உறுதியாக உள்ளோம் என பஞ்சாப் போலீசார் தெரிவித்துள்ளனர்.

