ஹரியானானில் அசோகா பல்கலை.,யில் மாணவர்கள் இருவர் சடலமாக மீட்பு
ஹரியானானில் அசோகா பல்கலை.,யில் மாணவர்கள் இருவர் சடலமாக மீட்பு
ADDED : பிப் 16, 2025 11:15 AM

சண்டிகர்: ஹரியானாவில் அசோகா பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் இருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளன. இது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
ஹரியானா மாநிலம் சோனிபட்டில் உள்ள அசோகா பல்கலைக்கழக வளாகத்தில் இரண்டு மாணவர்கள் இறந்து கிடந்தனர். அவர்களின் உடலை மீட்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இது குறித்து போலீசார் கூறியதாவது: விடுதியின் 10வது மாடியில் இருந்து குதித்து தெலுங்கானாவை சேர்ந்த 20 வயது மாணவன் தற்கொலை செய்துள்ளார்.
மற்றொரு மாணவன் இதய கோளாறு காரணமாக இறந்ததாக தெரிகிறது. இந்த மாணவனுக்கு வயது 19. இவர் பெங்களூருவை சேர்ந்தவர். இரண்டு மாணவர்களின் உடல்கள் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளன. சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். நாங்கள் மாணவர்கள் மற்றும் ஊழியர்களிடம் விசாரண நடத்தி வருகின்றோம். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

