ADDED : மே 12, 2026 11:25 PM
புதுடில்லி: முன்பகை காரணமாக இரு வாலிபர்கள் கத்தியால் குத்தப்பட்டது தொடர்பாக இரண்டு சிறுவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வடகிழக்கு டில்லி கோகல்புரி சஞ்சய் காலனியை சேர்ந்த, ராகுல்,18, மற்றும் விஜய்,23, ஆகிய இருவரையும் சிலர், நேற்று முன் தினம் இரவு கத்தியால் குத்தி விட்டு தப்பினர். காயம் அடைந்த இருவரும் ஜி.டி.பி., அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கொலை முயற்சி வழக்கு பதிவு செய்த கோகல்புரி போலீசார், கண்காணிப்புக் கேமராக்களில் பதிவாகி இருந்த காட்சிகளை ஆய்வு செய்தனர். மேலும், தனிப்படையினர் குற்றவாளிகளை தீவிரமாக தேடி வந்தனர்.
இந்நிலையில், 17 வயதுடைய இரண்டு சிறுவர்களை தனிப்படையினர் நேற்று கைது செய்து, இரண்டு கத்திகளை பறிமுதல் செய்தனர். முன்பகை காரணமாக இரு வாலிபர்களையும் கத்தியால் குத்தியதை இருவரும் ஒப்புக் கொண்டனர். விசாரணை நடக்கிறது.
