அதிகாலையில் ஒரு அலறல்! ம.பி.யில் தடம்புரண்ட பயணிகள் ரயில்
அதிகாலையில் ஒரு அலறல்! ம.பி.யில் தடம்புரண்ட பயணிகள் ரயில்
ADDED : செப் 07, 2024 10:00 AM

ஜபல்பூர்: மத்தியபிரதேச மாநிலத்தில் விரைவு ரயிலின் 2 பெட்டிகள் திடீரென தடம்புரண்டதால் பயணிகள் அதிர்ந்து போயினர்.
மத்தியபிரதேச மாநிலம் இந்தூர் பகுதியில் இருந்து ஜபல்பூருக்கு எக்ஸ்பிரஸ் ரயில் புறப்பட்டு சென்றது. அதிகாலை 5 மணி அளவில் ரயில் ஜபல்பூர் ரயில் நிலையத்தின் 6வது நடைமேடையை நோக்கி வந்து கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராத விதமாக நடைமேடையில் இருந்து 150 மீட்டர் தொலைவில் 2 ரயில் பெட்டிகள் தடம்புரண்டது.
பிளட்பாரம் என்பதால் ரயில் மிக மெதுவாக வந்து கொண்டு இருந்தது. அதனால் பெரும் உயிரிழப்பு, சேதங்கள் ஏற்படவில்லை. ரயில் பெட்டி ஏன் தடம்புரண்டது என்பதற்கான காரணங்கள் குறித்து ரயில்வே நிர்வாகம் எந்த அறிவிப்பையும் வெளியிடப்படவில்லை.
ரயில் பெட்டிகள் திடீரென தடம்புரண்டதால் பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். விபத்து குறித்து ரயில்வே நிர்வாகம் விசாரணையை துவக்கி உள்ளது.