ஏழை, நடுத்தர வர்க்கத்தினருக்கு ஐந்து ஆண்டுகளில் 2 கோடி வீடு
ஏழை, நடுத்தர வர்க்கத்தினருக்கு ஐந்து ஆண்டுகளில் 2 கோடி வீடு
ADDED : பிப் 02, 2024 01:49 AM

புதுடில்லி: கடந்த 10 ஆண்டுகளில் மோடி அரசு, ஒவ்வொருவருக்கும் வீடு, குடிநீர், மின்சாரம், சமையல் எரிவாயு, வங்கிக் கணக்கு ஆகியவற்றை உள்ளடக்கிய வளர்ச்சியை அளிக்க முயற்சி மேற்கொண்டுஉள்ளது.
வாடகை வீடுகள், குடிசை பகுதிகளில் வாழும் நடுத்தர மற்றும் ஏழை மக்களின் சொந்த வீட்டு கனவை நனவாக்க, திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன.
கடந்த 2016ல் துவங்கப்பட்ட பிரதமர் கிராமப்புற வீடு கட்டும் திட்டத்தில், மூன்று கோடி வீடுகள் என்ற இலக்கு நெருங்கப்பட்டுள்ளது. அடுத்த ஐந்து ஆண்டுகளில், மேலும் இரண்டு கோடி வீடுகள் கட்டப்படும்.
300 யூனிட் இலவசம்
'பிரதமர் சூர்யோதய' திட்டத்தின் கீழ், நாடு முழுதும் ஒரு கோடி வீடுகளின் மொட்டை மாடியில் சூரிய மின் உற்பத்தி தகடுகள் அமைக்கும் பணி நிறைவேற்றப்பட உள்ளது.
இதன் வாயிலாக, ஒரு கோடி வீடுகளுக்கு மாதம் 300 யூனிட் மின்சாரம் இலவசமாக கிடைப்பதுடன், ஆண்டுக்கு 15,000 முதல் 18,000 ரூபாய் வரை மிச்சமாகிறது. இவ்வாறு நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்

