வராஹி பிரதிஷ்டை முதலாண்டு ஓம் சக்தி கோவிலில் 2 நாள் விழா
வராஹி பிரதிஷ்டை முதலாண்டு ஓம் சக்தி கோவிலில் 2 நாள் விழா
ADDED : பிப் 15, 2025 02:50 AM

சிவாஜி நகர்: பெங்களூரு சிவாஜி நகர் ஷெப்பிங்ஸ் சாலையில் உள்ள ஓம் சக்தி கோவிலில், கடந்தாண்டு வராஹி அம்மன் பிரதிஷ்டை செய்யப்பட்டது. இதன் முதலாம் ஆண்டு விழா, நாளை மறுதினம் நடக்கிறது.
அன்றைய தினம் காலையில் அம்மனுக்கு அபிஷேகம், 1,008 குங்கும அர்ச்சனை நடக்கிறது. 21ம் தேதி காலையில், திரிவேணி சங்கம நதி தீர்த்தத்தால், வராஹி அம்மனுக்கு அபிஷேகம் செய்யப்படுகிறது. இதன்பின், கோமாதா பூஜை, கணபதி ஹோமம், நவக்கிரஹ ஹோமம், பிரத்யங்கிரா மற்றும் வராஹிக்கு சிறப்பு ஹோமம், மஞ்சள் கொம்பு, மஞ்சள் கிழங்கு, கஸ்துாரி மஞ்சள் ஹோமம் நடக்கின்றன.
மதியம் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. மாலை 5:00 மணிக்கு டாக்டர் லோகேஷ் தலைமையில், அம்மனுக்கு படைக்கப்படும் 108 பிரசாத வரிசைத்தட்டு ஊர்வலம் நடக்கிறது. பூர்ணகும்பம் வர்ணிப்புடன் அம்மனுக்கு பூஜைகள் நடக்கின்றன. விழா ஏற்பாடுகளை, கோவில் நிறுவனர் சக்தி சண்முகம், சக்தி சுந்தரி செய்து உள்ளனர்.