sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 27, 2025 ,ஐப்பசி 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

சுயம்பு காளியம்மன் கோவிலில் 2 நாள் பங்குனி உத்திர திருவிழா

/

சுயம்பு காளியம்மன் கோவிலில் 2 நாள் பங்குனி உத்திர திருவிழா

சுயம்பு காளியம்மன் கோவிலில் 2 நாள் பங்குனி உத்திர திருவிழா

சுயம்பு காளியம்மன் கோவிலில் 2 நாள் பங்குனி உத்திர திருவிழா


ADDED : ஏப் 11, 2025 06:42 AM

Google News

ADDED : ஏப் 11, 2025 06:42 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஹலசூரு: ஹலசூரு சுயம்பு காளியம்மன் கோவிலில், பங்குனி உத்திர திருவிழா இரண்டு நாள் நடக்கிறது.

ஹலசூரில் உள்ள சுயம்பு காளியம்மன் கோவிலில், நாளையும், நாளை மறுநாளும் பங்குனி உத்திர திருவிழா நடக்கிறது. முதல் நாளான 12ல் மாலை 4:00 மணிக்கு பந்தக்கால்; 5:00 மணிக்கு மணமகன் அழைப்பு; இரவு 7:30 மணிக்கு விருந்து உபசரிப்பு நடக்கிறது.

இரண்டாம் நாளான 13ல் காலை 10:30 மணி முதல் மதியம் 12:00 மணிக்குள் மிதுனம் லக்னத்தில் சுபமுகூர்த்தம் நடக்கிறது. முன்னதாக, 11:40 மணிக்கு மாங்கல்ய தாரணம் நடக்கிறது. மதியம் 12:00 மணிக்கு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது.

பங்குனி உத்திர திருவிழாவில், ஸ்ரீபார்வதி - பரமசிவன் கல்யாண உத்சவத்தை காண வரும் பக்தர்கள், தங்கள் வேண்டுதல்கள் நிறைவேற, ஸ்ரீபார்வதி பரமேஸ்வரனுக்கு வேஷ்டி, சேலை அல்லது பணம் வழங்கலாம்; அம்பாளுக்கு பிரார்த்தனை செய்து, மாங்கல்யம் கட்டுபவர்களுக்கு விரைவில் திருமணமாகும். கணவருக்கு தீர்க்க ஆயுள் வேண்டி, சுமங்கலிகளும் மாங்கல்யம் கட்டலாம்.

பணக்கஷ்டம் தீர்ந்து சகல பாக்கியம் கிடைக்க, திருமணத்தன்று சுமங்கலிகளுக்கு மஞ்சள், குங்குமம், மலர், வளையல், மாங்கல்ய கயிறு கொடுக்கலாம். விழா ஏற்பாடுகளை கோவில் டிரஸ்டிகள் பார்த்திபன், சந்தானம் செய்துள்ளனர்.






      Dinamalar
      Follow us