sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 13, 2025 ,ஐப்பசி 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

கனமழையால் மூணாறில் 2 இடங்களில் நிலச்சரிவு; ஒருவர் பலி, போக்குவரத்து பாதிப்பு

/

கனமழையால் மூணாறில் 2 இடங்களில் நிலச்சரிவு; ஒருவர் பலி, போக்குவரத்து பாதிப்பு

கனமழையால் மூணாறில் 2 இடங்களில் நிலச்சரிவு; ஒருவர் பலி, போக்குவரத்து பாதிப்பு

கனமழையால் மூணாறில் 2 இடங்களில் நிலச்சரிவு; ஒருவர் பலி, போக்குவரத்து பாதிப்பு


ADDED : ஜூலை 27, 2025 04:27 PM

Google News

ADDED : ஜூலை 27, 2025 04:27 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

இடுக்கி: கனமழை எதிரொலியாக, மூணாறில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் ஒருவர் பலியானார்.

கேரளாவில் பல்வேறு மாவட்டங்களில் கடந்த பல நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. எர்ணாகுளம், காசர்கோடு உள்ளிட்ட 9 மாவட்டங்களுகு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

இடைவிடாது கொட்டி வரும் மழையால்,இடுக்கி மாவட்டம் மூணாறில் இரண்டு இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டது. கொச்சி - தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலையில் மூணாறு தாவரவியல் பூங்கா அருகே நேற்று இரவு மண்சரிவு ஏற்பட்டு லாரி மீது விழுந்து டிரைவர் கணேசன்(58) என்பவர் இறந்தார். உடன் இருந்த முருகன் என்பவர் படுகாயம் அடைந்தார்.

அதே பகுதியில் இன்று காலை 8:00 மணிக்கு மண்சரிவு ஏற்பட்டு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. கிட்டத்தட்ட 20 மீட்டர் தொலைவுக்கு கற்கள் நிரம்பி காணப்பட்டது. போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தப்பட்டு உள்ளது.

சாலையில் கிடக்கும் கற்களை அகற்ற 2 நாட்களாகும். நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு உள்ளது. மழை தொடர்ந்து நீடிப்பதால், நிலச்சரிவு மீண்டும் ஏற்படும் அபாயம் உள்ளதாக தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணைய பொறியாளர்கள் தெரிவித்துள்ளனர்.






      Dinamalar
      Follow us