தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/ஜம்மு – காஷ்மீரில் மாயமான 2 போலீசார் உடல்கள் மீட்பு

ஜம்மு – காஷ்மீரில் மாயமான 2 போலீசார் உடல்கள் மீட்பு

ஜம்மு – காஷ்மீரில் மாயமான 2 போலீசார் உடல்கள் மீட்பு


ADDED : நவ 12, 2026 09:57 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 12, 2026 09:57 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஸ்ரீநகர்: ஜம்மு – காஷ்மீரில் மாயமான இரண்டு சிறப்பு போலீஸ் அதிகாரிகளின் உடல்கள் துப்பாக்கி குண்டு காயங்களுடன் வனப்பகுதியில் இன்று (நவ.,12) மீட்கப்பட்டன.

ஜம்மு – காஷ்மீரில் கிஷ்த்வார் மாவட்டத்தின் கியார் தச்சன் பகுதியைச் சேர்ந்த ரஷ்பால் குமார், 45, பாபி சந்த், 57, ஆகியோர் சிறப்பு போலீஸ் அதிகாரிகளாக பணியாற்றி வந்தனர். நேற்று முன்தினம், ராணுவத்தின் 17வது ராஷ்ட்ரிய ரைபிள்ஸ் படையினருடன் இணைந்து, தச்சன் வனப்பகுதில் ரோந்து சென்றபோது இவர்கள் இருவரும் திடீரென மாயமாகினர்.

இதைத்தொடர்ந்து, உள்ளூர் போலீசாருடன் ராணுவத்தினர், அங்குள்ள அடர்ந்த வனப்பகுதியில் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இந்நிலையில், இன்று அதிகாலை மார்வா போலீஸ் எல்லைக்குட்பட்ட தேர்னா டாப் வனப்பகுதியில் ரஷ்பால் குமார் மற்றும் பாபி சந்த் ஆகியோரின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டன.

இருவரது உடல்களிலும் துப்பாக்கித் தோட்டாக்கள் பாய்ந்த காயங்கள் இருந்தன. இவர்கள் வைத்திருந்த இரண்டு துப்பாக்கிகள் கொள்ளைப்போனது கண்டறியப்பட்டது. வனப்பகுதியில் பதுங்கியிருந்த பயங்கவாதிகள் திட்டமிட்டு, இந்த தாக்குதலை நடத்தியிருக்கலாம் என போலீசாருக்கு சந்தேகம் எழுந்துள்ளது.

இதைத்தொடர்ந்து, கிஷ்த்வார் மற்றும் அதன் சுற்றுவட்டார வனப்பகுதிகளில் கூடுதல் பாதுகாப்புப் படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். தப்பியோடிய பயங்கரவாதிகளைப் பிடிக்க அப்பகுதி முழுதும் சுற்றிவளைக்கப்பட்டு தீவிர தேடுதல் வேட்டை நடத்தப்பட்டு வருகிறது.

முன்னதாக, நேற்று (நவ.,11) காஷ்மீரின் குல்காம் பகுதியில் சி.ஆர்.பி.எப்., எனப்படும் மத்திய ரிசர்வ் போலீஸ் படையின் சோதனைச் சாவடி மீது பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிசூட்டில், மூன்று வீரர்கள் காயமடைந்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us