உள்ளடக்கத்திற்கு செல்ல
ADDED : மார் 29, 2026 12:47 AM
அ நிறம் | அளவு
புதுடில்லி: ஈரான் அனுமதியுடன் ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து, சமையல் எரிவாயுவை ஏற்றிக் கொண்டு மேலும் இரண்டு கப்பல்கள் நம் நாட்டுக்கு வந்து கொண்டிருக்கின்றன.
மேற்காசிய போர் பதற்றத்தால், கச்சா எண்ணெய் போக்குவரத்து நடக்கும் ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் முடக்கி உள்ளது. எனினும், மத்திய அரசு பேச்சு நடத்தியதை அடுத்து, நம் நாட்டுக்கு வரும் கப்பல்களுக்கு ஈரான் அனுமதி அளித்துள்ளது.
அந்த வகையில், மேற்காசிய நாடுகளில் இருந்து சமையல் எரிவாயுவை ஏற்றிக் கொண்டு, ஈரான் அனுமதியுடன் ஹார்முஸ் ஜலசந்தியை பாதுகாப்பாக கடந்து, மேலும் இரண்டு கப்பல்கள் நம் நாட்டுக்கு வந்துக் கொண்டிருக்கின்றன.
இரு கப்பல்களும், 93,000 டன் எரிவாயுவை சுமந்து வருகின்றன.
