ADDED : ஜூன் 22, 2025 09:00 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுடில்லி:பிரபல நிறுவனத்தின் பெயரில் போலி தண்ணீர் பாட்டில் தயாரித்து விற்ற இருவர் கைது செய்யப்பட்டனர்.
வடமேற்கு டில்லி ஷகுர்பூரைச் சேர்ந்த சிக்கந்தர்,30, மற்றும் ஆஷிஷ்,19, ஆகிய இருவரும், பிரபல நிறுவனமான, 'பிஸ்லரி' பெயரில், போலி தண்ணீர் பாட்டில்கள் தயாரித்து விற்று வந்தனர். இதுகுறித்து பிஸ்லரி நிறுவனம் சார்பில் போலீசில் புகார் செய்யப்பட்டது.
ஷகுர்பூரில் அதிரடி சோதனை நடத்திய போலீசார், பிஸ்லரி நிறுவன போலி லேபிள்கள் மற்றும் தண்ணீர் பாட்டில் தயாரிக்க பயன்படுத்திய இயந்திரங்கள், கருவிகள் ஆகியவற்றை பறிமுதல் செய்து, சிக்கந்தர் மற்றும் ஆஷிஷ் ஆகிய இருவரையும் கைது செய்தனர்.
ஓராண்டாக போலி தண்ணீர் பாட்டில் தயாரித்து விற்பதை இருவரும் ஒப்புக் கொண்டனர். இதுதொடர்பாக, விஷால் குப்தா என்பவரை போலீசார் தேடி வருகின்றனர்.