ADDED : ஜூலை 26, 2025 10:20 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுடில்லி:கழிவுநீர் தொட்டியில் தவறி விழுந்த இரு இளைஞர்கள் உயிரிழந்தனர்.
தென்மேற்கு டில்லி குதுப் விஹாரில் புதிய வீடு கட்டும் பணி நடக்கிறது. நேற்று முன் தினம் மதியம், 2:00 மணிக்கு, ஏழு அடி ஆழமுள்ள கழிவு நீர் தொட்டி மீது கட்டப்பட்டு இருந்த மரக்கட்டைகளை, சுபாஷ்,32, பிரதீப்,22, ஆகிய இருவரும் பிரித்துக் கொண்டிருந்தனர். அப்போது கால் தவறி இருவரும் கழிவு நீர் தொட்டிக்குள் விழுந்தனர். இருவரும் உடனடியாக மீட்கப்பட்டு அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். பரிசோதனை செய்த டாக்டர்கள், இருவரும் ஏற்கனவே உயிரிழந்து விட்டதை உறுதி செய்தனர். இதுகுறித்து, சாவ்லா போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.