கூகுள் மேப்ஸ் காட்டிய வழியில் ஆற்றில் கார் கவிழ்ந்து 2 பேர் பலி
கூகுள் மேப்ஸ் காட்டிய வழியில் ஆற்றில் கார் கவிழ்ந்து 2 பேர் பலி
ADDED : செப் 25, 2024 12:52 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோட்டயம், கேரளாவில், ஆற்றில் கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், மஹாராஷ்டிராவைச் சேர்ந்த இருவர் பலியாகினர்.
மஹாராஷ்டிராவின் தானே மாவட்டத்தைச் சேர்ந்த ஜேம்ஸ் ஜார்ஜ், 48, சைலி ராஜேந்திர சர்ஜே, 27, ஆகியோர், கேரளாவுக்கு சுற்றுலா வந்தனர்.
கோட்டயம் மாவட்டத்தின் குமரகத்தில் இருந்து எர்ணாகுளத்துக்கு, வாடகை காரில் நேற்று முன்தினம் இரவு சென்றனர்.
கட்டுப்பாட்டை இழந்த கார், கைப்புழா என்ற ஆற்றில் கவிழ்ந்தது. இந்த விபத்தில், இருவரும் பலியாயினர். போலீஸ் விசாரணையில், 'கூகுள் மேப்ஸ்' செயலியின் வழிகாட்டுதல்படி இருவரும் காரை இயக்கியதாக தெரிகிறது.