விநாயகர் ஊர்வலத்தில் கல்வீச்சு 2 போலீஸ்காரர்கள் காயம்
விநாயகர் ஊர்வலத்தில் கல்வீச்சு 2 போலீஸ்காரர்கள் காயம்
ADDED : செப் 20, 2024 05:49 AM
தாவணகெரே: விநாயகர் ஊர்வலத்தில் கல்வீசப்பட்டதில், இன்ஸ்பெக்டர், போலீஸ்காரர் காயம் அடைந்தனர்.
தாவணகெரே டவுனில் விநாயகர் சதுர்த்தியை ஒட்டி, பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகர் சிலைகளை கரைக்க, நேற்று இரவு ஹிந்து அமைப்பினர் எடுத்து சென்றனர். பெத்துாரா சாலையில் சென்ற போது, விநாயகர் ஊர்வலத்தின் மீது மர்ம நபர்கள் கல்வீசிவிட்டு ஓடினர். பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட இன்ஸ்பெக்டர் குருபசவராஜ், போலீஸ்காரர் ரகு ஆகியோருக்கு காயம் ஏற்பட்டது.
விநாயகர் ஊர்வலத்தில் கல் வீசப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. தாவணகெரே எஸ்.பி., உமா பிரசாத் அங்கு விரைந்து சென்றார். முன்எச்சரிக்கை நடவடிக்கையாக கடைகள் அடைக்கப்பட்டன. பெத்துாரா, டாக்கீஸ், என்.ஆர்.சாலைகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. கல்வீசியவர்களை போலீஸ் தேடுகிறது.
சில தினங்களுக்கு முன்பு, மாண்டியா நாகமங்களாவில் விநாயகர் சிலை ஊர்வலம் மீது கல்வீசப்பட்டதுடன், கலவரமும் நடந்தது குறிப்பிடத்தக்கது.