நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சண்டிகர்:ரவுடி லாரன்ஸ் பிஷ்னோய் கும்பலைச் சேர்ந்த இருவரை, கடும் துப்பாக்கிச் சண்டைக்குப் பின், பஞ்சாப் போலீசார் கைது செய்தனர்
ரவுடி லாரன்ஸ் பிஷ்னோய் கும்பலைச் சேர்ந்த நீண்ட நாட்களாக தேடப்பட்ட இரு ரவுடிகள் ஜலந்தரில் பதுங்கி இருக்கும் தகவல் கிடைத்தது.
இதையடுத்து, தனிப்படை போலீசார் ஜலந்தரில் தேடுதல் வேட்டையைத் துவக்கினர்.
ரவுடிகள் பதுங்கியிருந்த இடத்தை நெருங்கிய போது, போலீசார் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர். போலீசாரும் பதிலடி கொடுத்தனர்.
இறுதியில் இருவரையும் சுற்றி வளைத்து துப்பாக்கி முனையில் கைது செய்தனர். கைது செய்யப்பட்டுள்ள இருவர் மீதும் கொலை, மிரட்டி பணம் பறித்தல் உட்பட பல வழக்குகள் நிலுவையில் உள்ளன.