ADDED : ஜன 10, 2025 11:14 PM
சிக்கபல்லாபூர்: கடந்த டிசம்பர் 28ம் தேதி, சிவகுமார் என்ற நபர் ஹொன்னஹள்ளி கேட் பகுதியில் தன் பைக்கை நிறுத்திவிட்டு, பெங்களூரு சென்றுள்ளார்.
சில நாட்கள் கழித்து திரும்பி வந்தார். அவர் நிறுத்தியிருந்த இடத்தில் பைக் இல்லை. அதிர்ச்சி அடைந்த அவர், ரூரல் போலீசில் புகார் செய்தார்.
சந்தேகப்படும் வகையில் சுற்றி திரிந்த ஹிந்துப்பூரை சேர்ந்த மனோஜ் குமார், 28, என்பவரை பிடித்து போலீசார் விசாரித்தனர். இதில், தொடர் பைக் திருட்டில் ஈடுபட்டதை ஒப்புக்கொண்டார்.
சிக்கப்பல்லாபூர், பாகேபள்ளி, தொட்டபல்லாபூர், பெங்களூரு, ஹிந்துப்பூர் உள்ளிட்ட இடங்களில் 14 பைக்குகளை திருடியதையும் ஒப்புக்கொண்டார். அவரிடமிருந்த 10 லட்சம் ரூபாய் மதிப்பிலான 14 பைக்குகளை போலீசார் மீட்டனர்.
மேலும் பைக் திருட்டில் தொடர்புடைய ஹிந்துப்பூரை சேர்ந்த ஜமீர், பெனுகொண்டாவை சேர்ந்த ஹரிஷ் ஆகியோரை போலீசார் தேடி வருகின்றனர்.
இதேபோல், சிந்தாமணி போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் நடைபெற்ற பைக் திருட்டு சம்பவங்கள் தொடர்பாக, பங்கார்பேட்டையைச் சேர்ந்த பங்காரப்பா என்பவரை கைது செய்தனர்.
அவரிடமிருந்து 12 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 12 பைக்குகள் மீட்கப்பட்டன.

