சத்தீஸ்கரில் 2 பெண்கள் நக்சலைட்டுகள் உட்பட 6 பேர் கைது; ஏராளமான ஆயுதங்கள் பறிமுதல்
சத்தீஸ்கரில் 2 பெண்கள் நக்சலைட்டுகள் உட்பட 6 பேர் கைது; ஏராளமான ஆயுதங்கள் பறிமுதல்
ADDED : ஜூலை 31, 2025 06:52 AM

ராய்ப்பூர்: சத்தீஸ்கர் மாநிலத்தில் 2 பெண்கள் நக்சலைட்டுகள் உட்பட 6 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். அவர்களிடம் இருந்து ஏராளமான ஆயுதங்கள், வெடிபொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது.
சத்தீஸ்கர் மாநிலத்தில் நக்சலிசத்தை ஒழிக்க பாதுகாப்பு படையினர் முனைப்பு காட்டி வருகின்றனர். வரும் 2026ம் ஆண்டு மார்ச் 31ம் தேதிக்குள் முழுமையாக அழிக்க வேண்டும் என மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. தற்போது பிஜாப்பூரில் நக்சலைட்டுகள் பதுங்கி இருப்பதாக, உளவுத்துறைக்கு தகவல் வந்தது. அப்பகுதியில் சத்தீஸ்கர் போலீசார், பாதுாப்பு படையினர் இணைந்து, தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
அப்போது, 2 பெண்கள் நக்சலைட்டுகள் உட்பட 6 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். அவர்களிடம் இருந்து ஆயுதங்கள், வெடிபொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. கைது செய்யப்பட்ட 6 பேரில், இரண்டு பேர் குறித்து தகவல் கொடுக்கும் நபரும் ரூ.2 லட்சம் சன்மானம் அறிவிக்கப்பட்டு இருந்தது.
இது குறித்து சத்தீஸ்கர் மாநில போலீசார் கூறியதாவது: நக்சல் எதிர்ப்பு நடவடிக்கையின் போது பசகுடா போலீஸ் ஸ்டேஷன் எல்லைக்குட்பட்ட தர்மபூர் கிராமத்திற்கு அருகில் உள்ள காட்டில் இருந்து, உய்கா சேது,32, மற்றும் உய்கா பைகி,33, ஆகிய இரண்டு பெண் நக்சலைட்டுகள் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
மேலும் 4 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். சில தினங்களாக பாதுகாப்பு படையினர் மற்றும் போலீசார் இணைந்து, இந்த நடவடிக்கையை மேற்கொண்டனர். கைது செய்யப்பட்ட நக்சலைட்டுகள் இடம் இருந்து டிபன் குண்டுகள், டெட்டனேட்டர்கள், மின்சார கம்பிகள், மண் தோண்டும் கருவிகள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.