கர்நாடகாவில் அதிர்ச்சி; இஸ்ரேல் பெண் உட்பட இருவருக்கு கூட்டு பாலியல் வன்கொடுமை
கர்நாடகாவில் அதிர்ச்சி; இஸ்ரேல் பெண் உட்பட இருவருக்கு கூட்டு பாலியல் வன்கொடுமை
ADDED : மார் 08, 2025 11:36 AM

ஹம்பி: கர்நாடகாவில் வெளிநாட்டு பெண் உள்பட 2 பேரை மர்ம நபர்கள் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இதுபற்றிய விவரம் வருமாறு;
இஸ்ரேல் நாட்டைச் சேர்ந்த இளம்பெண், அவரின் ஆண் நண்பர்கள் என மொத்தம் 5 பேர் ஒன்றாக கர்நாடகா மாநிலம் ஹம்பி மாவட்டத்தில உள்ள சனாப்பூர் ஏரிக்கரையில் இரவு விருந்து சாப்பிட்டனர். இளம்பெண்ணுடன் அவரின் பணிப்பெண்ணும் இருந்துள்ளார்.
அப்போது அவ்வழியாக வந்த இருவர் பெட்ரோல் பங்குக்கு எப்படி செல்வது என்பது போல வழி கேட்டனர். மேலும் ரூ.100 தருமாறு அவர்களை அச்சுறுத்தி கேட்டனர். அவர்கள் மறுக்கவே, ஆண் நண்பர்கள் 3 பேரையும் அருகில் உள்ள கால்வாயில் மர்ம நபர்கள் தள்ளிவிட்டுள்ளனர். பின்னர் இஸ்ரேல் பெண்மணியையும், அவரது பணிப்பெண்ணையும் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து விட்டு தப்பிச் சென்றுள்ளனர்.
இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தப்பிச் சென்ற மர்ம நபர்கள் தெலுங்கு மற்றும் கன்னடத்தில் பேசியது தெரிய வந்துள்ளது.
அவர்களை பிடிக்க 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டு உள்ளன. பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.