ராணுவ வீரர்கள் மீது தாக்குதல்; பெண்ணுக்கு வன்கொடுமை; ம.பி.,யில் அதிர்ச்சி சம்பவம்
ராணுவ வீரர்கள் மீது தாக்குதல்; பெண்ணுக்கு வன்கொடுமை; ம.பி.,யில் அதிர்ச்சி சம்பவம்
ADDED : செப் 12, 2024 07:06 AM

இந்தூர்: மத்திய பிரதேசம் அருகே ராணுவ வீரர்களை தாக்கி விட்டு, துப்பாக்கி முனையில் பெண் ஒருவர் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோல்கட்டா சம்பவம்
மேற்கு வங்கம் மாநிலம் கோல்கட்டாவில் இளம் பெண் டாக்டர் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தை கண்டித்து டாக்டர்கள் ஒரு மாதத்திற்கு மேலாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
கூட்டு வன்கொடுமை
இந்த சம்பவம் தொடர்பான பதற்றம் அடங்குவதற்கும் மத்திய பிரதேசத்தில் மற்றொரு சம்பவம் அரங்கேறியுள்ளது.
இந்தூரில் இருந்து 30 கி.மீ., தொலைவில் உள்ள அம்பேத்கர் நகருக்கு நள்ளிரவில் இரு இளம் ராணுவ வீரர்கள் தங்களின் பெண் நண்பருடன் காரில் வெளியே சென்றுள்ளனர். அப்போது, அங்கு வந்த 6 முதல் 7 பேர் கொண்ட மர்ம கும்பல், துப்பாக்கி முனையில், இரு இளம் ராணுவ வீரர்களை தாக்கி விட்டு, அந்தப் பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.
கைது
இது குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார், காயடைந்த இரு ராணுவ வீரர்கள் மற்றும் அந்தப் பெண்ணை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் அடையாளம் காணப்பட்ட நிலையில், வனப்பகுதியில் பதுங்கியிருந்த 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ராணுவ வீரர்களை தாக்கி விட்டு, இளம்பெண்ணை கூட்டு வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.