ADDED : மார் 20, 2024 11:21 PM
கான்பூர்:உத்தர பிரதேசத்தில், சொத்துத் தகராறில் வீட்டுக்கு தீ வைத்ததில், இரு வாலிபர்கள் உடல் கருகி உயிரிழந்தனர்.
உ.பி., மாநிலம் கான்பூர் அருகே லஷிகவான் கிராமத்தில் வசித்தவர்கள் அனில் சிங்,23, மற்றும் அவரது உறவினர் ராஜ்,22. அனில் வீடு தீப்பற்றி எரிந்தது. அக்கம்பக்கத்தினர் போலீஸ் மற்றும் தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவித்தனர்.
தீயணைப்புப் படையினர் மற்றும் போலீசார் விரைந்து வந்தனர். வீட்டுக்குள் உடல் கருகி இறந்து கிடந்த அனில் மற்றும் ராஜ் உடல்கள் மீட்கப்பட்டன. வீட்டில் இருந்த பொருட்கள், பைக் ஆகியவையும் தீயில் எரிந்து சாம்பாலாகிக் கிடந்தன.
அனிலுக்கு உறவினர்களுடன் சொத்துத் தகராறு இருந்துள்ளது.
அதனால் உறவினர்கள் வீட்டுக்கு தீ வைத்துள்ளனர் என முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
மேலும், வீட்டுக்குள் மதுபாட்டில்கள் மற்றும் கண்ணாடி டம்ளர்களும் கண்டெடுக்கப்பட்டன. விசாரணை முடுக்கி விடப்பட்டுள்ளது.
