ADDED : பிப் 01, 2024 07:10 AM

பெங்களூரு: பெங்களூரு எச்.ஏ.எல்.,சாலையில் கடவுள் ராமர் கட் அவுட் விழுந்ததில், மூன்று பாதசாரிகள் படுகாயமடைந்தனர்.
அயோத்தியில் ராமர் கோவில் கும்பாபிஷேகத்தை ஒட்டி, பெங்களூரில் பல இடங்களில் ராமர் உருவம் உள்ள கட் - அவுட்கள் வைக்கப்பட்டுள்ளன. அதுபோன்று பெங்களூரு எச்.ஏ.எல்., விமான நிலையம் சாலையில் 20 அடி உயரத்தில் ராமர் கட் - அவுட் அமைக்கப்பட்டிருந்தது. நேற்று மதியம், இந்த கட் அவுட் திடீரென சரிந்தது.
இது, நடைபாதையில் நடந்து சென்று கொண்டிருந்த மூன்று பாதசாரிகள் மீது விழுந்தது.
படுகாயம் அடைந்த மூவரும், பவுரிங் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகின்றனர். கட் - அவுட் அமைந்துள்ள பகுதி அருகில் தனியார் பள்ளி உள்ளது. உணவு இடைவெளிக்கு முன், இச்சம்பவம் நடந்ததால், அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.
'கும்பாபிஷேகம் முடிந்து பத்து நாட்களான பின்னரும், கட் அவுட் அகற்றப்படாததற்கு, அப்பகுதி மக்கள் கண்டனம் தெரிவித்தனர். எச்.ஏ.எல்., போலீசார் விசாரிக்கின்றனர்.