ADDED : ஜன 29, 2024 11:04 PM
கலபுரகி: கலபுரகி சேடத்தின் தெல்லுாரா கிராமத்தில் வசிப்பவர் ஜெகன்னாத் ஹனுமந்த ராகநுாரா, 30. இவர் இதே கிராமத்தின் 15 வயது சிறுமியை, 2022 ஏப்ரல் 14ல் கடத்திச் சென்றார். 27ம் தேதி வரை வீடு ஒன்றில் அடைத்து வைத்து, பலாத்காரம் செய்தார்.
கோவில் ஒன்றில் கட்டாய திருமணம் செய்து, ஊருக்கு அழைத்து வந்தார். இது தொடர்பாக, சிறுமியின் பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில், சேடம் போலீசார் 'போக்சோ' சட்டத்தின் கீழ், ஜென்னாத் ஹனுமந்தாவை கைது செய்தனர். விசாரணையை முடித்து, கலபுரகியின் கூடுதல் மாவட்ட, செஷன்ஸ் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.
விசாரணையில் இவரது குற்றம் உறுதியானதால், இவருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை, 20,000 ரூபாய் அபராதம் விதித்து, நேற்று தீர்ப்பளித்தது.
தீர்ப்பு வெளியான ஒரு மாதத்துக்குள் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு, 5 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கும்படி, மாநில சட்ட ஆணையத்துக்கு நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.