வாரணாசி ரயில் நிலையத்தில் தீ: 200 டூவிலர்கள் சேதம்
வாரணாசி ரயில் நிலையத்தில் தீ: 200 டூவிலர்கள் சேதம்
UPDATED : நவ 30, 2024 06:44 PM
ADDED : நவ 30, 2024 05:15 PM

வாரணாசி:வாரணாசி ரயில் நிலையத்தில் ஏற்பட்ட பயங்கர தீவிபத்தில் 200க்கும் ஏற்பட்ட டூவிலர்கள் எரிந்து சேதமடைந்தன.
உ.பி., மாநிலம் வாரணாசியின் கண்டோன்மென்ட் ரயில் நிலையத்தின் வாகனங்கள் நிறுத்தும் இடத்தில் இன்று( நவ.,30) அதிகாலையில் தீவிபத்து ஏற்பட்டது. இது மளமளவென பரவி அங்கிருந்த வாகனங்களுக்கும் பரவியது. இதனால், அங்கிருந்த 200க்கும் மேற்பட்ட டூவிலர்கள் எரிந்து சேதமடைந்தன. இதில் பெரும்பாலான வாகனங்கள் ரயில்வே ஊழியர்களுக்கு சொந்தமானது என தெரியவந்துள்ளது. இதில் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.
12 வாகனங்களில் வந்த தீயணைப்பு வீரர்கள், தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். ரயில்வே போலீசார், உள்ளூர் போலீசார் உதவியுடன் இரண்டு மணிநேரம் போராடி தீயை அணைத்தனர்.
'ஷார்ட் சர்க்யூட்' காரணமாக தீவிபத்து ஏற்பட்டது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. தொடர்ந்து விசாரணை நடக்கிறது.