2025 சாதனை ஆண்டு: பெருமைமிகு தருணங்களை மன் கி பாத் நிகழ்ச்சியில் நினைவு கூர்ந்த பிரதமர் மோடி
2025 சாதனை ஆண்டு: பெருமைமிகு தருணங்களை மன் கி பாத் நிகழ்ச்சியில் நினைவு கூர்ந்த பிரதமர் மோடி
ADDED : டிச 28, 2025 12:33 PM

நமது நிருபர்
2025ம் ஆண்டில் கிரிக்கெட் வெற்றி, அறிவியல் கண்டுபிடிப்பு, ஆபரேஷன் சிந்துார் என இந்தியா பல சாதனைகளை நிகழ்த்தி உள்ளது என பிரதமர் மோடி தெரிவித்தார்.
மன் கிபாத் நிகழ்ச்சியில், 2025ம் ஆண்டில் பெருமைமிகு தருணங்களை பட்டியலிட்டு பிரதமர் மோடி பேசியதாவது: அறிவியல், விண்வெளித் துறையில் இந்தியா மாபெரும் முன்னேற்றத்தை அடைந்துள்ளது; சுபான்ஷு சுக்லா சர்வதேச விண்வெளி நிலையத்தில் நுழைந்த முதல் இந்தியர் என்ற வரலாற்றை படைத்தார். 2025ம் ஆண்டில் கிரிக்கெட் வெற்றி, அறிவியல் கண்டுபிடிப்பு, ஆபரேஷன் சிந்துார் என இந்தியா பல சாதனைகளை நிகழ்த்தி உள்ளது. பாரதத்தின் மகள்கள் பார்வையற்றோருக்கான டி-20 உலகக் கோப்பையை வென்று வரலாறு படைத்தனர்.
சமரசம் செய்யாது
உலக சாம்பியன்ஷிப் போட்டிகளில் பல பதக்கங்களை வென்றதன் மூலம், பாரா தடகள வீரர்கள் எந்த தடையும் உறுதியைத் தடுக்க முடியாது என நிரூபித்துள்ளனர். ஆப்பரேஷன் சிந்தூர் ராணுவ நடவடிக்கை நாட்டின் பாதுகாப்பிற்கான உறுதிப்பாட்டை நிரூபிக்க உதவியது. இந்தியா பாதுகாப்பில் சமரசம் செய்யாது என்ற செய்தியை உலகுக்கு அனுப்பியது.
எனது தொகுதியான வாரணாசியில் காசி தமிழ்சங்கமம் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. தமிழ் கற்கலாம் என்ற கருத்தின் அடிப்படையில் நடந்த இந்த நிகழ்வு தமிழ், ஹிந்தி பேசுவோரை இணைத்தது. இதில் ஹிந்தி பேசுவோரும் தமிழ் பேச கற்று கொண்டனர். அவர்கள் பேசியதை கண்டு நான் வியந்தேன்.
வியப்பில்...!
தமிழ் பெரும் கலாசாரமான மொழி ஆகும். நம்பிக்கை, கலாசாரம் மற்றும் பாரதத்தின் தனித்துவமான பாரம்பரியம் அனைத்தும் 2025ல் ஒன்றாக காணப்பட்டன. ஆண்டின் தொடக்கத்தில் பிரயாக்ராஜ் மஹா கும்பமேளா ஏற்பாடு செய்யப்பட்டது. இது உலகம் முழுவதையும் வியப்பில் ஆழ்த்தியது. ஆண்டின் இறுதியில் அயோத்தியில் உள்ள ராமர் கோவிலில் கொடியேற்ற விழா ஒவ்வொரு இந்தியரையும் பெருமைப்படுத்தியது. இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

