ADDED : பிப் 08, 2025 06:29 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தங்கவயல்: தங்கவயல் தொகுதி அரசு ஊழியர்கள் சங்கத்தின் சார்பில் 2025ம் ஆண்டின் காலண்டர் வெளியீட்டு விழா நேற்று நடந்தது.
தங்கவயல் தாலுகா பஞ்சாயத்து அலுவலகத்தில் நடந்த விழாவில், தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ., ரூபகலா காலண்டரை வெளியிட்டார்.
அவர் பேசுகையில், ''காலண்டர் மிக அவசியம். இதை ஆண்டுதோறும் வெளியிடுவது மகிழ்ச்சி. அரசுப்பணி என்பதை அரசு ஊழியர்கள் கடவுளின் பணியாக கருதவேண்டும். நேர்மையாக செயல்படுங்கள். உங்களுக்கு அரசு உறுதுணையாக இருக்கும்,'' என்றார்.
வட்டார கல்வி அதிகாரி சைதாபி, தாலுகா பஞ்சாயத்து தலைமை அதிகாரி வெங்கடேஷ், அரசு ஊழியர்கள் சங்க தலைவர் நரசிம்ம மூர்த்தி உட்பட பலர் பங்கேற்றனர்.
அரசு ஊழியர்களுக்கு காலண்டர்கள் வழங்கப்பட்டன.