sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், செப்டம்பர் 16, 2025 ,ஆவணி 31, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

குடும்ப அரசியலால் பதவியை அனுபவிப்போர் 21 சதவீதம்; சட்டசபைகளில் குறைவு; பார்லி.,யில் அதிகம் ; முதலிடத்தில் காங்.,

/

குடும்ப அரசியலால் பதவியை அனுபவிப்போர் 21 சதவீதம்; சட்டசபைகளில் குறைவு; பார்லி.,யில் அதிகம் ; முதலிடத்தில் காங்.,

குடும்ப அரசியலால் பதவியை அனுபவிப்போர் 21 சதவீதம்; சட்டசபைகளில் குறைவு; பார்லி.,யில் அதிகம் ; முதலிடத்தில் காங்.,

குடும்ப அரசியலால் பதவியை அனுபவிப்போர் 21 சதவீதம்; சட்டசபைகளில் குறைவு; பார்லி.,யில் அதிகம் ; முதலிடத்தில் காங்.,

9


ADDED : செப் 13, 2025 02:35 AM

Google News

9

ADDED : செப் 13, 2025 02:35 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி: 'நாட்டின் தற்போதைய எம்.எல்.ஏ., - எம்.பி., - எம்.எல்.சி.,க்களில், 21 சதவீதம் பேர் குடும்ப அரசியல் பின்னணி உடையவர்கள். மொத்தமுள்ள 5,204 மக்கள் பிரதிநிதிகளில், ஐந்தில் ஒருவர் குடும்ப அரசியல் பின்னணியை கொண்டுள்ளனர். இது, லோக்சபாவில் அதிகமாக உள்ளது' என, ஏ.டி.ஆர்., எனப்படும் ஜனநாயக சீர்திருத்த சங்கம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக ஆய் வு நடத்தி, ஜனநாயக சீர்திருத்த சங்கம், தேசிய தேர்தல் கண்காணிப்பு ஆகியவை நேற்று வெளியிட்ட அறிக்கை:

தேசிய கட்சிகளில், 3,214 எம்.எல்.ஏ., - எம்.பி., - எம்.எல்.சி.,க்கள் பகுப்பாய்வு செய்யப்பட்டதில், 657 பேர் அதாவது 21 சதவீதத்தினர் குடும்ப அரசியல் பின்னணி உடையவர்கள் என்பது கண்டறியப்பட்டது.

அரசியல் பின்னணி இதில், 32 சதவீதத்துடன் காங்., முதலிடத்தில் உள்ளது. 18 சதவீதத்துடன், பா.ஜ., அடுத்த இடத்தில் உள்ளது.

மார்க்.கம்யூ., கட்சியைச் சேர்ந்த மக்கள் பிரதிநிதிகளில், 8 சதவீதம் பேர் மட்டுமே குடும்ப அரசியல் பின்னணி உடையவர்கள். நாட்டின் தற்போதைய, 1,107 எம்.எல்.ஏ., - எம்.பி., - எம்.எல்.சி.,க்கள் குடும்ப அரசியல் பின்புலம் கொண்டவர்கள்.

மாநில சட்டசபைகளில், குடும்ப அரசியல் பின்னணி உடைய எம்.எல்.ஏ.,க்கள் பங்கு, 20 சதவீதமாக உள்ளது.

அதே சமயம், லோக்சபா, ராஜ்யசபா, மாநில சட்ட மேல்சபைகளில் இது, முறையே, 31 சதவீதம்; 21 சதவீதம் மற்றும் 22 சதவீதமாக உள்ளது.

மாநிலங்கள் அளவில், குடும்ப அரசியல் பின்னணி உடைய மக்கள் பிரதிநிதிகள் பட்டியலில், முதலிடத்தில் உத்தர பிரதேசம் உள்ளது.

இங்குள்ள 604 மக்கள் பிரதிநிதிகளில், 141 பேர் அதாவ து 23 சதவீதத்தினர் குடும்ப அரசியல் பின்புலத்தில் இருந்து வந்தவர்கள். அடுத்தபடியாக, மஹாராஷ்டிராவில் 129; பீஹாரில் 96; கர்நாடகாவில் 94 மக்கள் பிரதிநிதிகள் குடும்ப அரசியல் பின்னணி உடையவர்கள்.

விகிதாசார அடிப்படையில், குடும்ப அரசியல் பின்னணி கொண்ட மக்கள் பிரதிநிதிகளில், ஆந்திரா முதலிடத்தில் உள்ளது.

அம்மாநிலத்தின் 255 மக்கள் பிரதிநிதிகளில், 86 பேர் அதாவது 34 சதவீதத்தினர் குடும்ப அரசியல் பின்புலம் கொண்டவர்கள்.

ஆந்திரா, கர்நாடகா போன்ற தென் மாநிலங்களில் குடும்ப அரசியல் ஆழமாக வேரூன்றியுள்ள நிலையில், கிழக்கு மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் அது தலைகீழாக உள்ளது.

உதாரணத்துக்கு, பீஹாரில் உள்ள மக்கள் பிரதிநிதிகளில், 27 சதவீதத்தினர் குடும்ப அரசியலை பிரதிநிதித்துவப்படுத்தும் நிலையில், அசாமில், 9 சதவீத பேர் மட்டுமே உள்ளனர்.

வலுவான கட்சி மாநில கட்சிகளில், தேசியவாத காங்., சரத் சந்திர பவார், ஜம்மு - காஷ்மீர் தேசிய மாநாட்டு கட்சி ஆகியவை, 42 சதவீத குடும்ப அரசியல் பிரதிநிதித்துவத்தை பதிவு செய்கின்றன.

இதைத் தொடர்ந்து, ஒய்.எஸ்.ஆர்., காங்., 38; தெலுங்கு தேசம் 36 சதவீதத்துடன் உள்ளன. மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியின் திரிணமுல் காங்கிரஸ், 10 சதவீதம்; அ.தி.மு.க., 4 சதவீத குடும்ப அரசியல் பிரதிநிதித்துவத்தை காட்டுகின்றன.

ஆய்வு செய்யப்பட்ட, 4,665 ஆண் மக்கள் பிரதிநிதிகளில், 856 பேர் அதாவது, 18 சதவீதத்தினர் குடும்ப அரசியலை பிரதிநிதித்துவப்படுத்துகின்றனர். 539 பெண் மக்கள் பிரதிநிதிகளில், 251 பேர் அதாவது 47 சதவீதத்தினர் அரசியல் குடும்பங் களைச் சேர்ந்தவர்கள்.

ஆண்களை விட பெண்களிடையே குடும்ப அரசியல் பின்னணி இரண்டு மடங்கு அதிகமாக உள்ளது.

அதிகபட்சமாக, உத்தர பிரதேசத்தில் குடும்ப அரசியல் பின்புலம் கொண்ட பெண் மக்கள் பிரதிநிதிகள் உள்ளனர். அடுத்த இடத்தில், மஹாராஷ்டிரா, பீஹார், ஆந்திரா உள்ளன.

வே ட்பாளர் தேர்வில் ஆதிக்கம் செலுத்துதல், அதிக தேர்தல் செலவுகள், உள்கட்சி ஜனநாயகம் இல்லாதது போன்ற காரணிகளால், குடும்ப அரசியல் த லைதுாக்குகிறது.

வலுவான கட்சி அமைப்புகளைக் கொண்ட பெரிய மாநிலங்களான தமிழகம், மேற்கு வங்கத்தில் குடும்ப அரசியல் குறைவாகவே உள்ளது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.






      Dinamalar
      Follow us