ADDED : ஆக 21, 2026 09:54 PM
துபாய், ஆக. 22–
பாகிஸ்தான் பார்லிமென்ட்டில், அந்நாட்டின் போதைப்பொருள் கட்டுப்பாட்டு அமைச்சகம் தாக்கல் செய்த அறிக்கை:
பாதுகாப்பு அச்சுறுத்தல்கள், விசா காலம் முடிந்தும் தங்கியிருத்தது, முறையற்ற ஆவணங்கள், யாசகம் கேட்டது, போதைப்பொருள் வழக்குகள் போன்ற பல்வேறு காரணங்களுக்காக மார்ச் 1 முதல் ஜூலை 13 வரை ஆறு வளைகுடா நாடுகளில் இருந்து அதிகளவில் பாகிஸ்தானியர்கள் வெளியேற்றப்பட்டு உள்ளனர்.
சவுதியில் இருந்து 15,500, ஐக்கிய அரபு எமிரேட்ஸில் இருந்து 3,803, ஓமனில் இருந்து 1,606, பஹ்ரைனில் இருந்து 521, கத்தார் நாட்டில் இருந்து 429 மற்றும் குவைத்தில் இருந்து 97 பேர் நாடு கடத்தப்பட்டுள்ளனர்.
பாகிஸ்தானிய துாதரகங்களால் அவசரப் பயண ஆவணங்கள் வழங்கப்பட்டு, அந்தந்த நாடுகளின் அரசால் முறைப்படி கைது செய்யப்பட்டு நாடு கடத்தப்பட்டவர்கள் மட்டுமே இதில் அடங்குவர். சொந்த விருப்பத்தின் பேரிலோ அல்லது முறையான பாஸ்போர்ட்டிலோ திரும்பியவர்கள் இதில் சேர்க்கப்படவில்லை.
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
