ADDED : ஜூலை 04, 2017 01:50 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுடில்லி: ஜி.எஸ்.டி. வரிவிதிப்பு அமலபடுத்தப்பட்டதையடுத்து 22 மாநிலங்களில் சுங்கச்சாவடிகள் அகற்றப்பட்டன. ஒரு தேசம், ஒரே வரி அடிப்படையில் ஜி.எஸ்.டி. எனப்படும் சரக்கு சேவை வரி கடந்த 1-ம் தேதி முதல் நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டது.
நாடு முழுவதும் ஒரே வரி சட்டம் அமல்படுத்தப்பட்ட 3 நாட்கள் ஆனநிலையில் மாநிலங்களில் எல்லையில் சுங்கச்சாவடிகளில் வரி வசூலிக்கும் முறை ஒழிக்கப்பட்டது. இதனால் நாடு முழுவதும் 22 மாநிலங்களில் சுங்கச்சாவடிகள் அகற்றப்பட்டன. இதற்கு முன் சுங்கச்சாவடிகளில் வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டிய நிலை இருந்தது. தற்போது ஜி.எஸ்.டி. வரி அமல்படுத்தப்பட்டதால் இனி ஒரு மாநிலத்தில் இருந்து மற்றொரு மாநிலத்திற்குள் நுழையும் சரக்கு வாகனங்கள் சிரமமின்றி நுழையும்.

