தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/================ விமான இறக்கையில் திடீர் தீ உயிர் தப்பிய 229 பயணியர்

================ விமான இறக்கையில் திடீர் தீ உயிர் தப்பிய 229 பயணியர்

================ விமான இறக்கையில் திடீர் தீ உயிர் தப்பிய 229 பயணியர்


ADDED : நவ 17, 2026 08:39 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 17, 2026 08:39 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மங்களூரு: மங்களூரில் இருந்து பெங்களூரு புறப்பட்ட, ‘இண்டிகோ’ விமானத்தின் இறக்கை பகுதியில் தீப்பொறி கிளம்பியதால், ஓடுபாதையிலேயே விமானம் நிறுத்தப்பட்டது. பா.ஜ., முன்னாள் எம்.பி., உட்பட 229 பயணியர் தப்பினர்.

கர்நாடக மாநிலம், மங்களூரு பஜ்பே விமான நிலையத்தில் இருந்து, பெங்களூரு கெம்பேகவுடா விமான நிலையத்திற்கு நேற்று (நவ.,16) மாலை 6:00 மணிக்கு, ‘இண்டிகோ’ நிறுவன விமானம் புறப்பட்டது. தட்சிணகன்னடா தொகுதி பா.ஜ., முன்னாள் எம்.பி., நளின்குமார் கட்டீல் உட்பட 229 பயணியர், ஏழு விமான ஊழியர்கள் என 236 பேர் விமானத்தில் இருந்தனர்.

விமானம் புறப்பட்டு ஓடுபாதையில் சென்றபோது, தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டு இறக்கையில் தீப்பொறி கிளம்பியதை, விமானி கவனித்தார். உடனடியாக அவசர பிரேக்கை அழுத்தி, ஓடுபாதையில் விமானத்தை நிறுத்தினார்.

விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகள் விரைந்து வந்து, விமானத்தில் இருந்த பயணியரை பத்திரமாக தரையிறக்கி, முனையத்திற்கு அழைத்து சென்றனர். தொழில்நுட்ப குழு விமானத்தை சோதனை செய்தபோது, ‘தற்காலிகமாக பறக்க தகுதியற்றது’ என்பது தெரிந்தது.

இதையடுத்து, பெங்களூரில் இருந்து வரவழைக்கப்பட்ட மாற்று விமானத்தில் பயணியர் அனுப்பி வைக்கப்பட்டனர். தீப்பொறி கிளம்பியதை கவனித்து, உடனடியாக விமானத்தை நிறுத்தியதால் 229 பயணியரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். ஒருவேளை விமானம் பறக்க ஆரம்பித்து இருந்தால் பெரும் அசம்பாவிதம் நடந்திருக்கலாம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us