ADDED : அக் 25, 2024 11:01 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தங்கவயல்: ஜாமினில் வெளிவந்தவர், நீதிமன்றத்தில் ஆஜராகாமல், 23 ஆண்டுகள் தலைமறைவாக இருந்தவரை போலீசார் கைது செய்தனர்.
தங்கவயலின் மோத்தகபள்ளி என்ற கிராமத்தில் 1999ல் ஒரு குடிசைக்கு தீ வைத்து, நாராயணசாமி என்பவரை தாக்கியதாக, நாகராஜ் என்பவரை பேத்தமங்களா போலீசார் கைது செய்தனர். அவரை சிறையில் அடைத்தனர்.
தங்கவயல் நீதிமன்றம் அவரை, 2001ல் ஜாமினில் விடுவித்தது. அதன் பின்னர் நடந்த விசாரணையில் அவர் ஆஜராகவில்லை. பிடிவாரன்ட் பிறப்பிக்கப்பட்டது.
மோத்தகபள்ளியில், நாகராஜ் இருப்பதாக தெரியவந்தது. 23 ஆண்டுகளுக்கு பின், நேற்று முன்தினம் அவரை, பேத்தமங்களா போலீசார் கைது செய்தனர். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அவரை மீண்டும் சிறையில் அடைத்தனர்.