வயநாட்டில் 24 தமிழர்கள் உயிரிழப்பு: அதிர்ச்சி தகவல் வெளியானது
வயநாட்டில் 24 தமிழர்கள் உயிரிழப்பு: அதிர்ச்சி தகவல் வெளியானது
ADDED : ஆக 03, 2024 12:42 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வயநாடு: வயநாடு நிலச்சரிவில் 24 தமிழர்கள் உயிரிழந்துள்ளது தெரியவந்துள்ளது.
கேரள மாநிலம் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 340 பேர் உயிரிழந்துள்ளனர். 5வது நாளாக மீட்புப்பணி தொடர்கிறது. தமிழர்களுக்கு உதவி செய்ய தமிழகத்தில் இருந்து இரண்டு ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் அனுப்பி வைக்கப்பட்டு உள்ளனர்.
அவர்கள் அங்கு சென்று ஆய்வு செய்ததில், வயநாட்டில் வசித்த தமிழர்கள் 21 பேர் மற்றும் தமிழகத்தில் இருந்து வேலைக்கு சென்ற 3 பேர் என மொத்தம் 24 பேர் உயிரிழந்து உள்ளது தெரியவந்துள்ளது. 25 பேரை காணவில்லை எனவும், 130 பேர் நிவாரண முகாம்களில் தஞ்சமடைந்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.