ADDED : மார் 26, 2026 02:12 AM
புதுடில்லி: காஸ் சிலிண்டர்களை பதுக்கி வைத்திருந்த, ஐந்து பேர் கைது செய்யப்பட்டு, 248 சிலிண்டர்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
தெற்கு டில்லி சங்கம் விஹாரில் போலீஸ் நடத்திய அதிரடி சோதனையில், அதிக விலைக்கு விற்பதற்காக பதுக்கி வைக்கப்பட்டு 154 காஸ் நிரப்பப்பட்ட மற்றும் 29 காலி சிலிண்டர்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
இது தொடர்பாக ஷேர் சிங், சூரஜ் பரிஹார், ரகு ராஜ் சிங் மற்றும் ஜிதேந்தர் சர்மா ஆகிய நான்கு பேர் கைது செய்யப்பட்டனர்.
அதேபோல, தென்மேற்கு டில்லியின் சாவ்லாவில்,65 காஸ் சிலிண்டர்கள் பறிமுதல் செய்யப்பட்டு, அசோக் குமார்,52, என்பவர் கைது செய்யப்பட்டார். அதிக விலைக்கு காஸ் சிலிண்டர்கள் விற்றதை ஒப்புக் கொண்டார்.
டில்லி மாநகர் மற்றும் புறநகரில் குற்றப்பிரிவு மற்றும் தனிப்படை போலீசார் அதிரடி சோதனை நடத்தி காஸ் சிலிண்டர் வினியோகத்தை கண்காணித்து வருகின்றனர்.
