ADDED : ஜன 20, 2024 06:01 AM

தங்கவயல்: அயோத்தியில் ராமர் கோவில் கும்பாபிஷேகம் நடப்பதை முன்னிட்டு தங்கவயலில் நாளை மறுநாள் சிறப்பு பூஜைக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ராபர்ட்சன் பேட்டை சுராஜ்மல் சதுக்கத்தில் முன்னாள் கவுன்சிலர் தீனா தலைமையில் ஸ்ரீராமர் படம் அலங்கரித்து பூஜை செய்யப்படுகிறது. சதுக்கம் முழுவதும் காவிக் கொடிகள் தோரணங்கள் கட்டப்பட்டுள்ளன.
பிரிட்சர்ட் சாலையில் 40 அடி உயர ஸ்ரீராமர் கட் அவுட் வைக்கப்பட்டுள்ளது. 22ம் தேதி மதியம் 12 மணிக்கு பூஜைகள் செய்யப்படுகின்றன. 2.5 லட்சம் லட்டு வழங்கப்பட உள்ளது.
சொர்ணம் நகர் சதுக்கத்தில் சுரேஷ் தலைமையிலும் ராமர் படத்துக்கு பூஜை செய்து பிரசாதம் வழங்குகின்றனர்.
ராபர்ட் சன் பேட்டை 3வது கிராசில் ராமருக்கு ஆச்சாரிகள் பூஜை செய்கின்றனர். ராபர்ட் சன் பேட்டை முழுதும் காவி தோரணங்கள் மயமாக உள்ளது.
அன்று மாலை 5:00 மணிக்கு ராபர்ட்சன் பேட்டை கீதா சாலையில் உள்ள பிரசன்ன லட்சுமி வெங்கட ரமண சுவாமி கோவிலில் இருந்து ஸ்ரீராமர் சிலையுடன் ஊர்வலம் நடக்கிறது. வழிநெடுகிலும் ராம பக்தர்கள், சாமியார்கள் பக்தியுடன் மந்திரங்கள் ஓதுகின்றனர்.