காவிரியில் 2.5 டிஎம்சி தண்ணீர் திறக்க வேண்டும்; கர்நாடக அரசுக்கு பரிந்துரை
காவிரியில் 2.5 டிஎம்சி தண்ணீர் திறக்க வேண்டும்; கர்நாடக அரசுக்கு பரிந்துரை
ADDED : மே 16, 2024 06:02 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுடில்லி: காவிரியில் 2.5 டிஎம்சி தண்ணீர் திறந்து விட வேண்டும் என கர்நாடக அரசுக்கு காவிரி ஒழுங்காற்று குழு பரிந்துரை செய்துள்ளது.
காவிரி ஒழுங்காற்று குழுவின் 96வது கூட்டம் இன்று( மே 16) டில்லியில் நடந்தது. இந்த கூட்டத்தில் கர்நாடக சார்பில் ஆஜரான அதிகாரிகள் ‛‛ அணைகளில் போதிய அளவு தண்ணீர் இல்லை'' எனக்கூறினர்.
இதனை நிராகரித்த காவிரி ஒழுங்காற்று குழு, மே மாதத்திற்கான 2.5 டி.எம்.சி., தண்ணீரை காவிரியில் திறந்து விட வேண்டும் என கர்நாடக அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது.