மலை மஹாதேஸ்வரா மலையில் 253 வகை பறவைகள் கணக்கெடுப்பு
மலை மஹாதேஸ்வரா மலையில் 253 வகை பறவைகள் கணக்கெடுப்பு
ADDED : பிப் 04, 2025 06:50 AM
சாம்ராஜ்நகர்: மலை மஹாதேஸ்வரா வன விலங்குகள் சரணாலயத்தில், 253 வகை பறவைகள் இருப்பது தெரியவந்துள்ளது.
சாம்ராஜ்நகர், ஹனுாரின், மலை மஹதேஸ்வரா வன விலங்குகள் சரணாலயம், இயற்கை வளங்கள் நிறைந்த பகுதியாகும். தேக்கு, சந்தனம், புங்கை, வேப்பிலை உட்பட, விலை மதிப்புள்ள ஏராளமான மரங்களை காணலாம்.
யானைகள், சிறுத்தை, புலி, மான், காட்டு எருமை, காட்டுப்பன்றி, கரடி, நரி, ஓநாய் என, பல்வேறு விலங்குகளின் வசிப்பிடமாக உள்ளது. இந்த வனப்பகுதியில் பறவைகள் எண்ணிக்கை அதிகரித்தது.
இதுதொடர்பாக, முதன் முறையாக, பறவைகள் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. இரண்டு நாட்கள் நடந்த கணக்கெடுப்பு, நேற்று முன் தினம் மாலை முடிந்தது. 500க்கும் மேற்பட்ட தன்னார்வ தொண்டு அமைப்பு உறுப்பினர்கள், அடர்ந்த வனப்பகுதியில் அலைந்து, கணக்கெடுப்பு நடத்தினர்.
மலை மஹாதேஸ்வரா வன விலங்குகள் சரணாலயத்தில், கழுகு, மரங்கொத்தி பறவை, நீலகிரி புறாக்கள் உட்பட, 253 விதமான பறவைகள் இருப்பது, கணக்கெடுப்பில் தெரியவந்தது.