ADDED : மே 29, 2024 09:12 PM

புதுடில்லி
: லோக்சபா தேர்தலில் இந்த ஆண்டு போட்டியிடும் வேட்பாளர்களில்
2,572 பேர் கோடீஸ்வரர்கள் என, ஆய்வில் தெரியவந்துள்ளது.
ஏ.டி.ஆர்.,
எனப்படும், ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கம் மற்றும் தேசிய
தேர்தல் கண்காணிப்பகம் ஆகியவை இணைந்து, தற்போது நடந்து வரும்
லோக்சபா தேர்தலில் போட்டியிடும் 8,337 வேட்பாளர்கள் தாக்கல்
செய்த பிரமாண பத்திரங்களை ஆய்வு செய்து வெளியிட்ட தகவலில்
கூறப்பட்டுள்ளதாவது:
. இந்த ஆண்டு லோக்சபா
தேர்தலில் போட்டியிடும் 8,360 வேட்பாளர்களில் 1,333 பேர் தேசிய
கட்சிகளை சேர்ந்தவர்கள்; 532 பேர் மாநில கட்சிகளை சேர்ந்தவர்கள்;
அங்கீகரிக்கப்படாத கட்சிகளை சேர்ந்த வேட்பாளர்கள் 2,580 பேர்;
3,915 பேர் சுயேச்சைகள்.
இதில்மொத்தம் போட்டியிடும்
8,337 வேட்பாளர்களில் 2,572 பேர் கோடீஸ்வரர்கள்; இதில், தேசிய
கட்சியை சேர்ந்த கோடீஸ்வர வேட்பாளர்கள் 906 பேர், மாநில கட்சி
வேட்பாளர்கள் 421 பேர், அங்கீகரிக்கப்படாத கட்சிகளை
சேர்ந்தவர்கள் 572 பேர், சுயேச்சைகள் 673 பேர் கோடீஸ்வரர்களாக
உள்ளனர்.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.