UPDATED : ஆக 18, 2011 07:07 AM
ADDED : ஆக 18, 2011 05:50 AM
புதுடில்லி: கடந்த மூன்று ஆண்டுகளில் இந்திய போர்விமானங்களினால் 26 விமான விபத்துக்கள் நடந்துள்ளன.இதில் 12 பேர் பலியாகியுள்ளனர்.
25 பேர் காயமடைந்துள்ளனர் என மத்திய ராணுவ அமைச்சர் தெரிவித்துள்ளார். பாராளுமன்ற ராஜ்யசபையில் மத்திய ராணுவ அமைச்சர் ஏ.கே. அந்தோணி கூறியதாவது: இந்திய விமானப்படைக்கு சொந்தமான போர்விமானங்கள் வாயிலாக கடந்த மூன்று ஆண்டுகளில் 26 விபத்துக்கள் ஏற்பட்டுள்ளன. இதில் 6 பைலட்டுகள் உள்பட 12 பேர் பலியாகியுள்ளனர். 25 -க்கும் மேற்பட்ட அரசு உயரதிகாரிகள் காயமடைந்துள்ளனர். கடந்த 2008-2009-ம் ஆண்டுகளில் எட்டு விபத்துக்களும், 2009-2010- ம் ஆண்டுகளில் 10 விபத்துக்களும், 2010-2011-ம் ஆண்டுகளில் ஆறு விபத்துக்களும் நடந்துள்ளன. இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் வரையிலான காலத்தில் இரண்டு போர்விமான விபத்துக்கள் என மூன்று ஆண்டுகளில் 26 விபத்துக்கள் நிகழ்ந்துள்ளன. இதில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு உரிய இழப்பீடுகள் அரசு வழிகாட்டுதல் முறைப்படி வழங்கப்பட்டுள்ளது. பெரும்பாலும் மனித தவறுகள் தான் 23 சதவீதம் போர் விமான விபத்துக்களுக்கு காரணம், இவற்றினை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அந்தோணி கூறினார்.